கோவை ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…!

வரி ஏய்ப்பு தொடர்பாக ஸ்ரீ ஆனந்தாஸ் குழுமத்தை மொத்தம் 40 குழுக்கள் அமைத்து வருமானவரி துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை ஶ்ரீ ஆனந்தாஸ் உணவக கிளைகளில்வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பல உயர்தர சைவ உணவகங்களும் பலகார கடைகளையும்  நடத்தி வருகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக ஸ்ரீ ஆனந்தாஸ் குழுமத்தில் மொத்தம் 40 குழுக்கள் அமைத்து வருமான துறை அதிகாரிகள் இன்று காலை முதல்சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகத்தின் கிளைகள், வடவள்ளி, லட்சுமி மில்ஸ், சுந்தராபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், புரூக்பீல்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில், இன்று காலை 6 மணி முதல் 40 குழுக்களாக வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நெல்லை மற்றும் கோவையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஆனந்தாஸ் உரிமையாளர் மணிகண்டன் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.



முன்னதாக, வடவள்ளியில் உள்ள ஆனந்தாஸ் உணவகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது,, அங்கிருந்த நிர்வாகத்தினர் அடையாள அட்டை கேட்டு வெளியே நிற்க வைத்ததாகவும், உள்ளூர் போலீசாருக்கும் தகவல் அளித்தாக தெரிகிறது.

இதையடுத்து, போலீசார் வந்த பின்னரே வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...