கோவையில் பணியின் போது மயங்கி விழுந்த காவலர் உயிரிழப்பு…!

108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனியார் நிறுவன ஊழியர்கள் கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


கோவை: கோவை கே. ஜி சாவடி ராஜேந்திர பிரசாத் வீதியை சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இன்று காலை வழக்கம்போல் சண்முகம் பணிக்கு வந்துள்ளார். பணிக்கு வந்து சிறிது நேரத்திலேயே திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரது மனைவி விஜி மற்றும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக, அங்கு வந்த 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனியார் நிறுவன ஊழியர்கள் கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணிக்கு வந்த காவலர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...