கோவையில் வரதட்சனை கேட்டு கொடுமை - மனைவியின் கையை உடைத்த கணவர் கைது; குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு..!

குனியமுத்தூர் காவல் ஆணையாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு, மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த மயில்கல் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் அப்புகுட்டி(33). ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்னூரை சேர்ந்த பிரியங்கா (27) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, பிரியங்காவிற்கு 7 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில், அப்புக்குட்டி, மற்றும் அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரியங்காவை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கணவன், மாமியார் மற்றும் மாமனார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரியங்காவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பிரியங்காவின் அவரது வலது கை உடைந்துள்ளது. பின்னர், அவரை அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரியங்கா வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, தகவலறிந்து சென்ற குனியமுத்தூர் காவல் ஆணையாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரியங்கா அளித்த புகாரின் பேரில் வரதட்சணை கேட்டு மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி மற்றும் அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், சிறைவைத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், அப்பெண்ணின் கணவர் அப்புக்குட்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சரஸ்வதி, துரைராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...