ஆழியாறு அணை கரையோரம் ஜாலியாக உலா வரும் யானை கூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மாலை நேரங்களில் ஆழியாறு அணை கரையை ஒட்டி யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைக் கூட்டத்தை காண வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் இருந்து, ஆழியாறு அணை நோக்கி கூட்டமாக வரும் யானைகளை, சுற்றுலா பயணிகளை ரசித்து வருகிறார்கள்.

பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில், கோடைக்காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து ஆழியாறு அணையை நோக்கி வருகின்றன.

இதில், கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று ஆழியாறு அணை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளது. மாலை நேரங்களில் ஆழியாறு அணை கரையை ஒட்டி யானைகள் சுற்றி திரிகின்றனர்.

இந்த யானைக் கூட்டத்தை காண வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குட்டியுடன் இருக்கும் யானைகளைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இருப்பினும் யானைக் கூட்டம் இருக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக நேரம் நிற்கக் கூடாது என்றும், பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...