கோவை விளாங்குறிச்சியில் புதிய 'டாஸ்மாக்' வேண்டாம்.. ஆட்சியரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு..!

'விளாங்குறிச்சி கிராமம்' என்ற பெயரை மாற்றி 'டாஸ்மாக் கிராமம்' என கூறும் அளவிற்கு அங்கு மதுபான கடைகள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் 10 டாஸ்மாக் கடைகள் இருக்கின்ற நிலையில், மேலும் ஒரு டாஸ்மாக் கடை (கடை எண்:1567) அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதனை அகற்ற வலியுறுத்தியும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



அந்த பகுதியில் மக்கள் அதிகம் வசித்து வருவதாலும், கடை அமைய உள்ள இடத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் இருப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் எனவே டாஸ்மாக் கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விளாங்குறிச்சி கிராமம் என்ற பெயரை மாற்றி டாஸ்மாக் கிராமம் என கூறும் அளவிற்கு அங்கு மதுபான கடைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், அப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அதனை எதிர்ப்பதாகவும், இதுகுறித்து ஏற்கனவே கடை உரிமையாளரிடம் தெரிவித்தும் தொடர்ந்து கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், எனவே இந்த கடையை அகற்றுவது குறித்து மாவட்ட காவல் ஆணையரிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே அந்த கிராமத்தில் 10 பார்கள் இருப்பதாக தெரிவித்த அவர் 3 மாநகராட்சி கவுன்சிலர்கள் இல்லமும் அங்குதான் இருப்பதாக தெரிவித்தார். மேலும் பார் உரிமையாளர்கள் தரைகுறைவாக பேசுவதாகவும் தெரிவித்தார்.

திமுக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லை என்றாலும் நேர கட்டுப்பாட்டை கடைபிடித்தால் கூட போதுமானது என தெரிவித்தார். விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...