கோவையில் 1431 ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய முகாம் - சூலூரில் கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி!

கோவையில் 1431 ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் 1431ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் முகாம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.



மேலும் இம்முகாமில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நில அளவை கருவிகளையும் பார்வையிட்டார். இந்த வருவாய் தீர்வாயம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று முதல் 1ஆம் தேதி வரை (விடுமுறை நாட்கள் திங்கட்கிழமை அல்லாமல்) நடைபெறுகிறது. முகாமினை வட்டங்கள் தோறும் சிறப்பாக நடத்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் சூலூர் வட்டம் செஞ்சேரிபுதூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணி இடையில் காலமான ஆரான் என்பவரது மகள் ஜானகிக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...