கோவையில் இடதுசாரிகள், விசிக சார்பில் - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, லாபம் கொழிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையின்மை, மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்வால் சிறு-குறு தொழில்கள் நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும், பாஜகவை கண்டித்து கோவை கணபதி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதே போன்று கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ், விசிக குரு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இதே போன்று பீளமேடு, சுந்தராபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிபிஐ எம்எல் மாவட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என்று ஏராளமானோர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...