கோவையில் 19-வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி: கொடிசியா தகவல்..!

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 2-முதல் 6-வரை 19-வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெறுவதாக கொடிசியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 2 முதல் 6 வரை 19 வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெறுவதாகவும், இக்கண்காட்சியில் இந்தியா, தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்க இருப்பதாகவும் கோவை கொடிசியா அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை கொடிசியா அலுவலகத்தில், கொடீசியாவின் தலைவர் ரமேஷ் பாபு செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 2 முதல் 6 வரை 19 வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெற இருப்பதாகவும், இக்கண்காட்சியில் இந்தியா, தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் 406 நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் 50000-பேர் வர்த்தக பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியின் மூலம் 800 கோடி அளவில் வணிகம் நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இந்தியா முழுவதும் உள்ள தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தர இருப்பதாகவும் தெரிவித்த ரமேஷ் பாபு, இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் சார்பில் மானியத்துடன் சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதில் நிதி உதவி பெறும் வகையில் NSIC மற்றும் SIDBI நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...