கோவை பொள்ளாச்சி அருகே மாந்தோப்பை சூறையாடிய காட்டு யானை..!

மாம்பழங்களை ருசித்து சென்றதோடு மாந்தோப்பில் இருந்த 20க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியது. இதனால், 3-லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே மாந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானை, 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நரிமுடக்கு எனும் இடத்தில் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.

தற்போது மாம்பழங்களின் சீசன் என்பதால் மரங்களில் கனிந்து நின்ற மாம்பழங்களைப் பறித்து விற்பனை செய்ய சக்திவேல் திட்டமிட்டு இருந்தார்.



இந்நிலையில், மாந்தோப்புக்குள் காட்டு யானை நுழைந்து பறிப்பதற்கு தயாரான நிலையில் இருந்த மாம்பழங்களை ருசித்துச் சென்றதோடு மாந்தோப்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியது.



இதனால், 3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த மரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

தோட்டத்துக்குள் காட்டு யானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...