'மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி'- கோவை வால்பாறையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு..!

பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்க மனுக்கள் பெறப்பட்டது. சிறப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் சார் ஆட்சியர் தலைமையில் வால்பாறையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்குத் தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வீட்டு மனை பட்டா போன்றவைகள் பெறுவதற்கு அரசு மாதம் தோறும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீர்வாய் நடைபெறும், இன்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் நான தேவ் ராவ் தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் இருந்து 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்க மனுக்கள் பெறப்பட்டது.



சிறப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 5 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டது.

மேலும் சுகாதாரத்துறை மருத்துவர் பாபு லட்சுமணன் சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார். வால்பாறை பகுதியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதன் மூலம் டெங்கு பரவும் அபாயம் உள்ளது என்றும், கடந்த 5 மாதங்களில் 6 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக 10 துப்புரவு ஊழியர்கள் சுகாதார துறைக்கு வழங்க வேண்டும் என்று மனு வழங்கினார்.

மேலும் நகராட்சி துணை சேர்மன் செந்தில் குமார், மனு ஒன்றை வழங்கினார். இதில் வால்பாறை பகுதியில் சில காலமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை தடுக்க நேற்று கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்ய கூடிய நபர்களை பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியரிடம் மனு வழங்கினார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...