'மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி' - கோவையில் பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் மனு..!

பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி துவங்கியது. ராமபட்டினம் உள்வட்டத்தில் 63 மனுக்கள் பெறப்பட்டு, 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கோவை தெற்கு வட்டம் மற்றும் வடக்கு வட்டத்திற்கான 1431ம் பசலி ஆண்டிற்குரிய ஜமாபந்தி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதில் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.



முதல் நாள் ஜமாபந்தியில் ராமபட்டிணம் உள்ள வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.

நாளை 27ம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டம், 31ம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டம், ஜூன் 1ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டம், 2ம் தேதி கோலார்பட்டி உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்க உள்ளது.

இன்று, ஜமாபந்தியின் போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...