கோவை மத்திய- மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்..!

இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அரசு ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: 3-கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



78-மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும், 1998-பின் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் தலைமை அலுவலகம் முன்பு மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.



இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டஅரசு ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இக்குழுவின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட செயலாளர் அரங்கநாதன், செயலாளர்கள் ஞானப்பிரகாசம், சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம், பி.எஸ்.என்.எல் டாட் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கம், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...