கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியை கடத்தி சென்ற மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையை சேர்ந்த 16 வயது மாணவி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
அதே கல்லூரியில் படித்து வந்த தாராபுரத்தை சேர்ந்த கவியரசன் (19) என்ற மாணவர் 16 வயது மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரி சென்று வீட்டிற்கு திரும்பிய மாணவியை, கவியரசன் கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மாணவியை கடத்தி சென்ற கவியரசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கவியரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.