வாளையாறு அருகில் லாட்டரி விற்க வந்த கேரளாவைச் சேர்ந்தவர்கள் கைது - ரூ.1.32 லட்சம் மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்!

கோவை வாளையாறு அருகே லாட்டரி விற்க வந்த கேரளாவைச் சேர்ந்தவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.1.32 லட்சம் மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கேரளாவில் இருந்து கோவை வழியாக அவிநாசி, திருப்பூர் மாவட்டங்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து க.க.சாவடி போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் பாலக்காடு - சேலம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்குள்ள சர்வீஸ் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாட்டரிகளை எடுத்து வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (38), கனகராஜ் (35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.32 லட்சம் மதிப்பிலான 3,300 லாட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...