'பிளாஸ்டிக் இல்லா வால்பாறையாக' மாற்ற வனத்துறை திட்டம்!

வால்பாறையை பிளாஸ்டிக் இல்லா பகுதியாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக வால்பாறைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்து பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்படுவதோடு, துணிப்பைகளும் வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை, மலைப் பகுதியானது. இது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது.

இங்கு பச்சை பசேல் என்று தேயிலை தோட்டங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. நல்ல காற்றோட்டமும், இயற்கை எழில் மிகுந்த பகுதியாக வால்பாறை விளங்குகிறது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், சிங்கவால் குரங்கு, இருவாட்சி பறவைகள், குரங்குகள் ஆகியவை வாழ்ந்து வருகிறது. இவற்றை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் போட்டு செல்வதால் அதை வனவிலங்குகள் உணவு என்று உண்டு இறந்து போக நேரிடுகிறது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதியில் அதிகப்படியான குரங்குகள் வாழ்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்வதால் அதை எடுத்து உண்ணும் குரங்குகள் பரிதாபமாக இறக்க நேரிடுகிறது.



இதை தடை செய்ய வால்பாறை வனத்துறையினர் வால்பாறைக்கு வரும் வழியான ஆழியார் பகுதி சோதனை சாவடி பகுதி, கேரளாவில் இருந்து வால்பாறைக்கு வரக்கூடிய மலுக்குப்பாறை சோதனை சாவடி பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக வாகன சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருந்தால் அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அவர்களுக்கு மஞ்சப்பை, துணிப்பைகள் கொடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் இல்லா வால்பாறையாக மாற்ற வனத்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



இன்று மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், மலுக்குப்பாறை சோதனை சாவடி பகுதியில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை பரிசோதனை செய்த வனத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு துணிப்பைகளை வழங்கினர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...