கோவை மாநகராட்சியில் ரூ.184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டுள்ளது - சட்டபேரவை மதிப்பீட்டு குழு தகவல்….!

கோவையில் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவையில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் முந்தைய காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக ரூ.184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மதிப்பீட்டுக் குழுவின் தலைவர், டி.ஆர்.பி ராஜா தலைமையில் நேற்று ஆர்.எஸ் புரம் உழவர் சந்தையில் தங்களது ஆய்வை துவக்கிய மதிப்பீட்டு குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற குழுவினர் கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கப்படும் தொடங்கப்படாமல் உள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.



இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக பகுதிகளில் மேற்கொள்ளபட்ட பணிகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்த டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மக்களின் வரிப்பணம் சரியான முறையில் செலவு செய்யப்பட்டு இருக்கிறதா? நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்னென்ன? என்பது குறித்து கேட்டு இருந்ததாகவும், இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது குறித்து 7 மணிநேரம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக பதிவான கருத்துக்களை சட்டமன்றத்தில் பதிவாகும் வரை வெளிப்படையாக கூற முடியாது எனக்கூறிய அவர், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பேருந்து வசதி குறித்த கோரிக்கைகள் தான் அதிகமாக வந்துள்ளதாகவும், வனத்துறையில் வழங்கபட வேண்டிய அனுமதிகள் குறித்த பிரச்சனைகள், மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்ந்த புகார்கள், குறிப்பாக நொய்யலாற்றில் நிலவிவரும் மாசு தொடர்பான பிரச்சனைகள்,குடிநீர் பிரச்சனை தொடர்பாக விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் குடிநீர் மிகவும் குறைவாக கிடைப்பதால், அதை சரி செய்யக்கூடிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தென்னை விவசாயிகளின் பிரச்னைகளில் ஒன்றான கொப்பரைத் தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து பேசி இருப்பதாக கூறியவர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.



மேலும், பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய அவர், கோவையில் கட்டப்பட்டு வரும் பாலங்களை ஆய்வு செய்ததில், பெரியநாயக்கன்பாளையம் பாலத்தை ஒன்பது மாதங்களில் கட்டி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஜி.என்.மில்ஸ் பாலம் நான்கு மாதங்களில் கட்டி முடிக்கபடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தன்னிடம் தொழில்துறையினர் கோவையில் இருந்து நாகப்பட்டினம் வரை உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழித்தடம் ஒன்றை அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். முந்தைய காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக கோவை மாநகராட்சியில் ரூ.184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியவந்ததுள்ளதாகவும், எந்த நோக்கத்துக்காக பணம் ஒதுக்கப்பட்டதோ, அதற்காக இல்லாமல் வேறு பணிகளுக்கு செலவிடப்பட்டு உள்ளது. அதற்கான காரணங்களையும் கோவை மாநகராட்சி கூறியிருக்கிறது எனவும் இது தொடர்பாக தமிழக அரசிடம் தெரிவிக்கப்படும், என சட்டபேரவை மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...