கோவையில் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு…!

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி சாவித்திரி(55) இவருடைய கணவர் இறந்த நிலையில், சாவித்திரி அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சாவித்திரி இரவு 8-மணி அளவில் மணிகாரம்பாளையம் தனியார் பள்ளி அருகில் சாலையில் நடந்து வந்துள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த 3-சவரன் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, சாவித்திரி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...