பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 420-கிலோ ரேஷன் அரிசி கோவையில் பறிமுதல்..!

35-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் மொத்தம் 420-கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 450-கிலோ ரேஷன் அரிசியைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதைத் தடுக்க குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்மாக்கினாம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் நேற்று, மாக்கினாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், 35-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் மொத்தம் 420-கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

பின்னர் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற கார் டிரைவர் ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...