கோவையில் நீதிமன்ற கோப்புகளை மறைத்து வைத்த நீதிமன்ற உதவியாளர் கைது…!

சமந்தப்பட்ட கோப்புகளை தேடிய போது அவை கிடைக்காத நிலையில், அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மனோஜ்குமார் அந்த ஆவணங்களை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ளEC கோர்ட், இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில்உதவியாளராக பணியாற்றி வருபவர் மனோஜ்குமார்.

கடந்த சில வாரங்களாக முறையான தகவல் அளிக்காமல் விடுமுறை எடுத்து வந்ததால், அவரை நீதிபதி 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டடார். இதனால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார் ஈரோடு மற்றும் கோவை வழக்கு தொடர்பாக மூன்று கோப்புகளை எடுத்து அதை மறைத்து வைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் பணியில் உள்ளவர்கள் அந்த கோப்புகளை தேடிய போது ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மனோஜ்குமார் அந்தஆவணங்களை எடுத்து மறைத்து வைத்ததுதெரியவந்தது.

இதையடுத்து, நீதிமன்ற பணியாளர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,மனோஜ்குமாரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...