கோவைப்புதூர் தற்காலிக விளையாட்டு மைதானம் சர்வதேச தரத்தில் மாற்றப்படும் - விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்

கோவை நேரு ஸ்டேடியத்தில் டெண்டர் அறிவித்து, 6 கோடியே 45 லட்சத்துக்கு புதிதாக சிந்தடிக் ட்ராக் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். புதிதாக கழிப்பறை வசதியும் செய்து தரப்படும்.



கோவை: கோவைப்புதூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், விளையாட்டு வீரர்களிடம் அவர்களது குறைகளை மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்படுத்துவதற்கான தற்காலிக விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் இந்த பகுதியில் இருக்கின்ற இளைஞர்கள் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்", என்றார்.

மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், காலை மற்றும் மாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் மக்கள் நல்ல காற்றை சுவாசிக்க, குறுங்காடுகள் அமைக்கப்படும். அவ்வாறு, குறுங்காடு அமைக்கும்போது சுற்றுச்சூழல் துறை மூலம், மரக்கன்றுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.

கோவை நேரு ஸ்டேடியம் மற்றும் ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள டிராக்குகள் சேதமடைந்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "நேரு ஸ்டேடியத்தில் டெண்டர் அறிவித்து, 6 கோடியே 45 லட்சத்துக்கு புதிதாக சிந்தடிக் ட்ராக் அமைக்க ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அடுத்த மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். புதிதாக கழிப்பறை வசதியும் செய்து தரப்படும்.

அதேபோல, ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஹாக்கி மைதானம், கடந்த ஆட்சியில் 5 கோடி ரூபாய் செலவு செய்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில், 4 கோடியே 90 லட்சம் வீண் அடிக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஹாக்கி மைதானம் அமைக்க 19 கோடியே 40 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஹாக்கி மைதானத்திற்கு அருகில் உயர் அழுத்த மின் கம்பிகள் உள்ளதால், தீ பற்றும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் உயர் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் ஹாக்கி பிளேயர்ஸ் அதிகம் உள்ளனர். எதிர்காலத்தில், நல்ல ஹாக்கி வீரர்களை உருவாக்க இந்த மைதானம் பயன்படும்.

அரசு பள்ளி மாணவர்கள் பொருத்தவரை, முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து 25 லட்சம் விளையாட்டு வீரர்கள் களத்திற்கு வந்துள்ளனர். விளையாட்டு துறையை மேம்படுத்த, முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, 10 விதியின் கீழ், 3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் சென்னையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 4 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் புதிய விளையாட்டு மைதானங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மொத்தமாக, அனைத்து விளையாட்டு வீரர்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை மூலமாக மாணவர்களுக்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிரமாபுற வீரர்களும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வகையில், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது"என்று அமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...