சேரன்மாநகர் அருகே குப்பை மேடாக இருந்த பகுதியை பசுமையாக மாற்றிய கவுன்சிலருக்கு பாராட்டு!

கோவையில் சேரன்மாநகர் பகுதியில் குப்பை மேடாக காட்சியளித்த இடத்தை பசுமை பகுதியாக மாற்றிக் கொடுத்த கவுன்சிலருக்கு மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் குடியிருப்பு பகுதி அருகே அமைந்துள்ளது செங்காளியப்பன் நகர்.

அப்பகுதியில் திறந்தவெளி இடத்தில் குப்பைகள் தொடர்ந்து அதிக அளவு கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதியாக காணப்பட்டது. பல ஆண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் கோவை பாபுவிடம் தெரிவித்தனர்.

அப்பகுதியை நேரில் பார்வையிட்ட கவுன்சிலர் உடனடியாக தூய்மை பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.



அப்பகுதி சுத்தம் செய்யப்பட்ட போதும் தொடர்ந்து குப்பைகள் கொட்ட வாய்ப்பு உள்ள காரணத்தால் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு சாணி தெளித்து கோலமிட்டு பசுமை நிறைந்த பகுதியாக மாற்றப்பட்டது.



மேலும் அத்து மீறி செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகள் நிலவிவந்த இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...