மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. பல்லடம் ஜமாபந்திக்கு பதாகைகளுடன் வந்த பெற்றோர்..!

நீங்கள் நிலத்திற்கு தனி பட்டா கொடுத்தால் மட்டுமே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நிலத்தை விற்று பணம் பெற முடியும் என்று, கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பெற்றோர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.


திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் நிலத்தை மீட்டு தங்கள் மகனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கையில் பதாகைகளுடன் வந்து பெற்றோர்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையிலான 1431 ஆம் பலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளித்தனர்.



மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வித ஏற்பாடுகளும் செய்யாததால் கரைப்புதூர் கிராமத்திலிருந்து வந்த மாற்றுத்திறனாளி மகாதேவன் என்பவர் சக்கர நாற்காலி இல்லாததால் நுழைவு வாயிலில் இருந்து தவழ்ந்து வந்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக பல்லடம் வடுகபாளையத்தில் வசித்து வரும் ராஜகோபாலன் என்பவர் தனது பெயரில் உள்ள சொந்தமான நிலத்தை கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் 13 வருட போராட்டத்திற்கு பிறகு கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



தற்போது தனி பட்டா கேட்டு ராஜகோபாலன் குடும்பத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.



மேலும் தங்கள் நிலத்தை தனிப் பட்டா கொடுத்தால் மட்டுமே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நிலத்தை விற்று பணம் பெற முடியும் எனவும் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு குடும்பத்தினருடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...