பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொன்ன கொடிசியா..!

மத்திய நிதி அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ வெளியிட்டுள்ள இரும்பு உள்ளிட்ட பொருட்கள்‌ மீதான சுங்க வரி மற்றும்‌ பெட்ரோல்‌, டீசல்‌ மீதான தீர்வை வரி குறைப்பு குறித்த அறிவிப்புக்கு கொடிசியா நன்றி தெரிவித்துள்ளது.


கோவை: மத்திய நிதி அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ அறிவித்துள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்‌ பொருட்கள்‌ மீதான தீர்வை வரி குறைப்பு குறித்த அறிவிப்பை கொடிசியா வரவேற்கிறது. இதன்மூலம்‌ உற்பத்திப்‌ பொருட்களின்‌ தயாரிப்பு விலையை குறைக்க முடியும்‌.

இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியுள்ளதாவது:-

கடந்த 21ஆம்‌ தேதி நிதியமைச்சர்‌ வெளியிட்ட அரசாணையின்படி ஸ்டீல்‌ மூலப்பொருட்கள்‌ இறக்குமதி வரி குறைப்பு மற்றும்‌ இரும்பு மற்றும்‌ ஸ்டீல்‌ மூலப்‌ பொருட்கள்‌ ஏற்றுமதி வரி அதிகரிப்பு ஆகியவற்றால்‌ உள்நாட்டில்‌ மூலப்பொருட்களின்‌ விலை கணிசமாகக் குறைவது, சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்குப் பயன்‌ அளிப்பதாகும்‌.

மேலும்‌ பெட்ரோலுக்கு லிட்டருக்கு 8 ரூபாயும்‌ டீசல்‌ 6 ரூபாயும்‌ குறைத்திருப்பது முறையே அவற்றின்‌ விலையை முறையே ரூபாய்‌ 9.50, ரூபாய்‌ 7 என விலையைக் குறையச்‌ செய்யும்‌. இதன்‌ மூலம்‌ போக்குவரத்து கட்டணங்கள்‌ குறைவதால்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களோடு, சாதாரண குடிமகனும்‌ விலைவாசியைச் சமாளிக்க முடியும்‌. என கண்டிப்பாக நம்புகிறோம்‌.

மேற்சொன்ன மக்கள்‌ நல அறிவிப்புக்காக நிதியமைச்சரைப்‌ பாராட்டி நன்றி தெரிவிப்பதோடு, மேலும்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலையைக்‌ குறைப்பதற்கான வாய்ப்புகள்‌ குறித்துப் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...