'மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி'- பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா அலுவலகங்களில் 26-ம் தேதி தொடக்கம்..!

இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.


கோவை: கோவை தெற்கு வட்டம் மற்றும் வடக்கு வட்டத்திற்கான 14231-ம் பசலி ஆண்டிற்குரிய ஜமாபந்தி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதில் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி தாலுகா அலுவலகத்தில் தொடங்க உள்ளது. முதல் நாள் ஜமாபந்தியில் ராமபட்டிணம் உள்வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது.

27-ம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டம், 31-ம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டம், ஜூன் 1-ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டம், 2-ம் தேதி கோலார்பட்டி உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்க உள்ளது. இதேபோல, வரும் 26-ம் தேதி ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை உள்வட்டத்துக்கும். 27-ம் தேதி மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டம், 31-ம் தேதி கோட்டூர் உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

இந்த ஜமாபந்தியின் போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...