'வங்கிப் பணிக்களுக்கு தமிழ் பாடம் கட்டாயம் இல்லை' என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்…!

தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழக இளைஞரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழக இளைஞரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



வங்கிப்பணிக்களுக்கு தமிழ் பாடம் கட்டாயம் அல்ல என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் இராகுலன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது மத்திய அரசின் ரயில்வே, வங்கிப்பணி, அஞ்சல் துறை என அனைத்து துறைகளில் இந்தி மொழியை திணித்து தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மத்திய அரசு வேண்டுமென்றே தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வேலைகளை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.



Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...