'மங்கி பாக்ஸ்' வைரஸ் குறித்து மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு – கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தகவல்…!

ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் 'மங்கி பாக்ஸ்' வைரஸ் குறித்து மருத்துவர்கள் மற்றும் பாரா மெடிக்கல் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


கோவை: இந்தியாவில் 'மங்கி பாக்ஸ்' வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டால், உடனடியாக கோவை அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த, 1958-ல் குரங்குகளிடையே பரவிய இந்த வைரஸ் நோய், மனிதர்களிடையே 1970ம் ஆண்டு ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவியது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியதால் இந்த நோய் 'மங்கி பாக்ஸ்' என அழைக்கப்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு, கணுக்கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. பெரியம்மை போல் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படும்.

சாதாரணமாக ஆப்ரிக்காவில் மட்டுமே தென்படும் இந்த வைரஸ் நோய், தற்போது பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு தென்பட்டு உள்ளது. இதைத் தவிர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவிலும், இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

கடந்த 20நாட்களில், 12 நாடுகளில், 100க்கும் மேற்பட்டோருக்கு 'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கு காய்ச்சல், பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் வேகம் அதிகமாக இருப்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இருந்தது. தற்போதும் அதன் தாக்கம் சில நாடுகளில் இருந்து வருகின்றது. இந்நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் வைரஸ் நோய் பரவத் துவங்கியுள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும்போது:-

'மங்கி பாக்ஸ்'எனப்படும் குரங்கு காய்ச்சல் என்பது, மரபணு மூலம் பரவக்கூடிய ஒரு வகையான வைரஸ். இது ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்டு, தற்போது ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.

பொதுவாகக் காற்றின் மூலம் பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடல் வியர்வை, எச்சில் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை, இருப்பினும் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக இந்த வைரஸ் குறித்து மருத்துவர்களுக்கு முதல்கட்டமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பணிகளை துவங்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து பாரா மெடிக்கல் ஊழியர்களுக்கும் இந்த வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

அதேபோல் ஒருவேளை இந்தியாவில் வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டால், உடனடியாக கோவை அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...