திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கையில், காரின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். விபத்து குறித்து, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் லூர்து ராஜ் (வயது 41). கட்டட வடிவமைப்பாளரான இவர், தனது தொழில் விஷயமாக நேற்று காலை ஹோண்டா i20 காரில் தனது டிரைவர் செபஸ்டியன் (48) என்பவர் அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்றுள்ளார்.

திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள நண்பர் விஜயராஜ் அழைத்துச் செல்ல இரவு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு, மூன்று பேரும் காரைக்குடி செல்வதற்காக வீரபாண்டி பகுதியிலிருந்து கோயில் வழி செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், திருப்பூர் பூங்கா நகர் பகுதி அருகே வந்தபோது திடீரென்று கார் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. உடனடியாக, டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தினார். பின்பு மூவரும் காரை விட்டு வெளியேறி, அருகில் இருந்து தண்ணீரை வாங்கி புகையை அணைக்க முயற்சி செய்தனர்.



ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.



உடனடியாக, திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடக்கு தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கையில், காரின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். விபத்து குறித்து, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...