கோவை பெரியகுளம், வாலாங்குளத்தில் 2 மாதங்களில் படகு சவாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்..!

கோவையில் பெரியகுளம், உக்கடம், வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் இன்னும் 2 மாத காலங்களில் பொதுமக்கள் படகு சவாரியை பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி மற்றும் புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி, செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாநகராட்சி நிா்வாகம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தது.



இதில், உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைப்பயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள், குழந்தைகள் பூங்கா, செல்ஃபி ஸ்பாட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக் கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்துக்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.



மேலும், செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டில், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலைப் பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளத்தில் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளன.



ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இக்குளங்களில், பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றுவரை சோதனை ஓட்டத்தில் உள்ள படகு சவாரியை, மக்கள் பயன்பாட்டுக்கு நிரந்தரமாக கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, "உக்கடம், பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் 2 மாதங்களில் படகு சவாரி மக்கள் பயன்பாட்டுக்கு வர தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் படகு சவாரி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்", என்றாா்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...