கோவை மதுக்கரை அருகே ரேசன் அரிசி கடத்தல் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கு: உறவினர் கைது….!

கோவை நாச்சிபாளையம் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை, கொடூரமாக வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவை நாச்சிபாளையம் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை, கொடூரமாக வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமநாதன் (39). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், ராமநாதன் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக - கேரளா எல்லையான வேலந்தாவளம் பாபாஜி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

ஆனால், கடந்த ஒரு வருடமாக, ராமநாதன் நாச்சிப்பாளையம் பகுதியில் தனியாக ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை கேரளாவிற்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற ராமநாதன் காலை 8 மணியளவில் உணவு வாங்கிக் கொண்டு அவர் தங்கியுள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது, காலை 10 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராமநாதன் வீட்டை கடந்து சென்ற போது, தலையில் வெட்டுக்காயங்களுடன் அவர் இறந்த கிடப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து அவர் மதுக்கரை போலீசுக்கு தகவல் அளித்தார் 

இதையடுத்து அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.பத்திரிநாராயணன், பேரூர் சரக டி.எஸ்.பி திருமால் உள்ளிட்டோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ராமநாதனை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி உத்தரவின் பேரில் மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்ற கோவை நாச்சிபாளையம் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை, கொடூரமாக வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமநாதன் (39). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் ராமநாதன் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக - கேரளா எல்லையான வேலந்தாவளம் பாபாஜி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

மேலும், ராமநாதன் கடந்த ஒரு வருடமாக நாச்சிப்பாளையம் பகுதியில் தனியாக ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை கேரளாவிற்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வெளியே சென்ற ராமநாதன் இன்று காலை 8 மணியளவில் உணவு வாங்கிக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் காலை 10 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராமநாதன் வீட்டை கடந்து சென்ற போது, தலையில் வெட்டுக்காயங்களுடன் அவர் இறந்த கிடப்பதை பார்த்துள்ளார்.

தகவலின் பேரில் அங்கு வந்த மதுக்கரை போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.பத்திரிநாராயணன், பேரூர் சரக டி.எஸ்.பி திருமால் உள்ளிட்டோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ராமநாதனை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி உத்தரவின் பேரில் மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 



இந்நிலையில், ராமநாதனை வெட்டிக்கொலை செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த அவரது உறவினரான முருகன் (35). என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த 18 ஆம் தேதி தேனி சென்ற ராமநாதன், முருகனின் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால், இது குறித்து தெரிந்தால் பிரச்சனையாகும் என அஞ்சி அவரது மனைவி முருகனிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

பின்னர், சம்பவம் குறித்து முருகனுக்கு தெரிந்ததால், அவர் தனது மனைவியிடம் சண்டையிட்டு கண்டித்துள்ளார். இதனால், அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக, மன உலைச்சலில் இருந்த முருகன், கோவைக்கு கிளம்பி வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட நாள் காலை ராமநாதன் தனது அறையில் மது போதையில் தூங்கிய கொண்டிருந்த போது, முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சராமாரியாக அவரை வெட்டியுள்ளார்.

இதில், ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது. தற்போது முருகனை கைது செய்துள்ள போலீசார் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...