கோவையில் கள்ளக்காதலனுடன் பேசிய மனைவியை கண்டித்த கணவன் - கள்ளக்காதலன் விஷம் குடித்து தற்கொலை!

கோவையில் கள்ளக்காதலனுடன் பேசிய மனைவியை, கணவர் கண்டித்ததால் கள்ளக்காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் வினோக்குமார் (30). இவர் கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட்டில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. வினோத்குமார், அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதும் அவரது வீட்டிற்கு சென்று இளம் பெண்ணுடன் பேசி பழகி வந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர், தனது மனைவியை கண்டித்தார். மேலும் அந்த கள்ளக்காதலனுடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறி அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வினோத்குமாரை அழைத்த அந்த பெண், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்படி வினோத்குமார் விஷத்தை வாங்கி அந்த பெண்ணுக்கு கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு சென்று தானும் விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்த சிறிது நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து இது குறித்து அக்கம் பக்கத்தினர் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விஷம் குடித்த கள்ள காதல் ஜோடியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார். அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து வினோத்குமாரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...