திருப்பூரில் இரு குழந்தைகளுடன் தாயும் அடித்துக்கொலை.. கொலையாளியை தேடும் போலீஸ்..!

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரையும் கொலை செய்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி (38) என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சல் அரசுப்பள்ளி வீதியில் ஒரு வீட்டில் தனது 2 மகன்கள் தர்ணீஷ்(9) மற்றும் நித்தீஷ்(6) ஆகியோருடன் குடியேறியுள்ளார்.

இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இன்று காலை வீட்டிற்கு வந்த நபரோடு தகராறு ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு சென்று பார்த்த போது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் ஏஜி பாபு தலைமையில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முத்துமாரியின் வீட்டிற்கு வந்த நபர் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...