கோவை மருதமலை கோவிலில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைய உள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மருதமலை கோவிலில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவை பேரூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேட்டரி கார் சேவையை துவக்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறை தனது பயணத்தை மனநிறைவோடு ஒரு வருடத்தை நிறைவு செய்த மாற்று கருத்துள்ளவுளர்களும் மகிழ்ந்து வரவேற்கின்ற அளவில் செயல்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் அறிவிப்பு எண் 35-ல் அறிவிக்கப்பட்டது போல் ஏற்கனவே இருக்கின்ற பழுதடைந்த 21 மின்கல ஊர்திகளை பழுது நீக்க வேண்டும், அதுபோக 13 திருக்கோவில்களில் மின்கல ஊர்திகளை ஏற்படுத்த முதல்வர் அறிவித்திருந்தார்.
அதில் முதலாவதாக, பேரூரில் மின்கல ஊர்தி சேவை துவக்கி வைக்கப்பட்டதோடு, அறிவிப்பு எண் 48-ல் ஐந்து திருக்கோவில்களில் மலைப்பாதை அமைக்க ஒரு கோடி ஒதுக்கீடு செய்து அடிப்படை கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதில் கண்ணகி திருக்கோவில், போளூர் நரசிம்மன் திருக்கோவில், திருவண்ணாமலை பர்வதமலை கோவில், சதுரகிரி அய்யன் திருக்கோவில், வெள்ளியங்கிரி திருக்கோவில் ஆகிய கோவில்களில் நேற்று தானும் துறை ரீதியான அதிகாரிகளும் ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார்.
வெள்ளிங்கிரி பாதைகளை சீரமைக்க முதல்வரிடம் கலந்து பேசி அதனை விரைவில் சரி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கரிகால சோழனால் கட்டப்பட்ட பேரூர் கோவில் கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாகவும், தற்போது பேரூர் கோவிலுக்கு ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு போடப்பட்டுள்ளது.
விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 23 கோயில்கள் ரூ.63 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குக்கு தயாராக உள்ளது. ஆத்திகர்கள், நாத்திகர்கள் அனைவருக்கும் ஒரு சேர்ந்த ஆட்சி. இந்த ஆட்சிக்கு பேருதான் திராவிட மாடல் ஆட்சி, இறையன்பர்கள், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை சரி செய்து தர முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் ஒவ்வொரு கோவிலாக ஆய்வு செய்து வருகிறேன்.
மருதமலை கோவிலில் லிப்ட் அமைக்க ஆறு கோடி அளவிற்கு கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. எனவும் 45 லிருந்து 50 நாட்களில் லிப்ட் அமைக்கும் பணிகள் துவங்கும் எனவும் தெரிவித்தார். வெள்ளியங்கிரி மலை ஏற்றம் புதிய அனுபவம், அதிக காற்று, அதிக குளிர் நிலவுகிறது எனவும் செங்குத்தான மலை பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அனுவாவி முருகன் கோவிலுக்கும், பழனி இடும்பன் மலை கோவிலுக்கும் ரோப்கார் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். அதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு அறிக்கை பெறப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சேகர்பாபு, பெரிய கோயில்களில் அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் பாலூட்டும் அறைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு சில திருக்கோவில்களில் உற்புறமாகவும், ஒரு சில திருக்கோவில்களில் கழிப்பறைகள் வைத்துக் கொள்ள சில சங்கங்கடங்கள் இருப்பதாகவும் 48 கோவில்களில் ஒரு ஆண்டுக்குள் மற்றும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் துறையின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அண்ணாமலை ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்குவது தொடர்பான கேள்விக்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது எனவும், பக்தியை வைத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வது இல்லை எனவும் அலையாத வீட்டில் நுழையாத விருந்தாளியாக போன்றவர்களை பற்றி பதில் கூற விரும்பவில்லை எனவும் ஆண்டவன் அழைத்தால் தான் வர முடியாது முடியும் எனவும் அழைக்காமல் வர முடியாது எனவும் தெரிவித்தார்.
கோவில்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, முதலில் பெரிய கோவில்களில் குறிப்பாக அதிக மக்கள் வரும் கோவிலில் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என தெரிவித்தார். தமிழக முதல்வரின் ஆட்சிதான் திருக்கோவில் வரலாற்றில் பொற்கால ஆட்சி என தெரிவித்தார்.