வசூல் வேட்டையில் கந்து வட்டிக்காரர் - 50-ஆயிரம் கடனுக்கு 6-லட்சம் வட்டி? கோவை ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு..!

50 ஆயிரம் ரூபாய் கடனுக்கு, 6 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு, வங்கி புத்தகம், ரேசன் கார்டு, ஏடிஎம் கார்டை திருப்பி தராமல், மிரட்டும் கந்து வட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மைப் பணியாளர் மகன் ஆட்சியரிடம் மனு.


கோவை: சிங்காநல்லூரில் உள்ள கந்து வட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மைப் பணியாளர் மகன் ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் சி எம் சி காலனியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (55). தூய்மை பணியாளராக மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த

இவரது மனைவி கமலா உடல் நலக்குறைவால், மூன்று வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி.

இந்நிலையில், வெள்ளிங்கிரிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அவரது மருத்துவ செலவிற்கு கந்துவட்டிக்காரர் மனோகர் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதற்கு, பதிலாக வெள்ளிங்கிரி மற்றும் அவரது மனைவி கமலாவின் வங்கி புத்தகம், ஏ.டி.எம் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை அடமானமாக வைத்துள்ளனர்.

மேலும், அவரது மனைவி கமலா இறந்த போது, அவருக்கு வந்த பணப்பலன்கள் சுமார் 6 லட்சத்தை பைனான்சியர் மனோகர் எடுத்துக் கொண்டதாகவும், மேலும் வெள்ளிங்கிரியின் ஏ.டி.எம் கார்டு மூலமாக மாத மாதம், மனோகர் பணம் எடுத்துக் கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.



தற்போது, வெள்ளிங்கிரியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது மகன் பணம் கேட்ட போது, மனோகரன் உங்க அப்பன் செத்தா எனக்கு என்ன? எனக்கு வட்டியோட அனைத்தையும் வாங்கி செல், என மிரட்டியதாக அவரது மகன் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், பல லட்சங்களை வாங்கிக்கொண்டு, தங்களை துன்புறுத்தும் மனோகரன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தந்தை மற்றும் அம்மாவின் வங்கி புத்தகங்களையும், ஏடிஎம், ரேசன் கார்டுகளையும், கந்துவட்டி கும்பலிடம் இருந்து மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...