கோவையில் அரிசியாக இல்லை மாவாக கடத்தப்படும் ரேஷன் அரிசி: பொள்ளாச்சியில் இருவர் கைது; ஒருவருக்கு வலை..!

ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளையும், அதனை அரைக்கப் பயன்படுத்திய இயந்திரத்தையும், பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் பொருட்களை பதுக்கி அரைத்து மாவாக்கி விற்ற நூதன திருடர்களையும் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை அரைத்து மாவாக்கி விற்ற நூதன திருடர்கள் இருவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி மாவாக மாற்றி விற்பனை நடப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று, கோவை ரோடு மணியன் தோட்டம் முதல் தெருவில் உள்ள ஒரு அரவை மில்லில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு, ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், ஆய்வின்போது 45-கிலோ எடையில் 25-மூட்டைகளில் 1710-கிலோ ரேஷன் அரிசியும், 45-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் 540-கிலோ ரேசன் கோதுமையும் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளையும், அதனை அரைக்கப் பயன்படுத்திய இயந்திரத்தையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களைப் பதுக்கிய30-வயதான முகமது மற்றும் 36-வயதான இம்தியாஸ் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு, உடந்தையாக இருந்த மில் உரிமையாளர் இம்ரானை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...