தக்காளி விலை கிடுகிடு உயர்வு - கோவையில் திருமண விழாவில் மணமக்களுக்கு தக்காளி பரிசு!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு தக்காளி பரிசளித்த சம்பவம் உறவினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



கோவை: கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

உள்ளூரில் போதிய விளைச்சல் இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுவதால் படிப்படியாக தக்காளி விலை உயர்ந்து தற்போது கோவையில் கிலோ ரூ.95 க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. இதனால் குறைவான அளவே பொதுமக்கள் தக்காளி வாங்கி வருகின்றனர்.

உணவு சமைப்பதற்கான காய்கறிகளில் தக்காளியின் பங்கு மிக முக்கியமாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணியை சேர்ந்த அக்கீம் மகள் அப்சானா மற்றும் ஹாரீஸ் திருமண நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கியுள்ளனர்.



மணமக்களுக்கு தக்காளி பரிசாக வழங்கப்பட்ட வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பரிசு பொருளாக கொடுக்கும் வகையில் விலைவாசி உள்ளது என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பரிசை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...