காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு!

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம், சூலூர் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸில் மாணவர்கள் இணையும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே வாசன் கலந்து கொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது:



ஜவுளித் தொழில் ஒரு மாதமாக நசிந்து உள்ளது. 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளித் தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பேரறிவாளன் நிரபராதி என தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை ஆதரிக்கும் வரவேற்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி நிற்பது வருத்தத்துக்குரிய செய்தி.

கூட்டணி பதவி இரட்டை வேடத்தின் உச்சகட்டமாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு உள்ளது. முதல்வர் காணொளி வாயிலாக மற்ற ஆறு பேர் விடுதலை தொடர்பாக நீலகிரியில் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் இந்த ஆலோசனை நடத்தியது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழக அரசின் செயல்பாடு கூட்டணி காங்கிரஸ் கட்சியின் உணர்வுக்கு எதிராக உள்ளது.

முதல்வரின் செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி மற்றும் பதவிதான் முக்கியம் என்பது தெரிய வருகிறது. இதில் பாதிக்கப்படுவது காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர்கள் தான். இனி வரும் தேர்தல்களில் அதிமுக கூட்டணி வெல்லும். இதற்கு மக்கள் தயாராக உள்ளனர். நாங்கள் மத்தியில் பாஜக உடனும் மாநிலத்தில் அதிமுக உடன் கூட்டணியில் உள்ளோம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழக அரசு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை என அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. மற்ற மாநிலங்களும் மேலும் விலையை குறைக்க முன்வந்துள்ளது. தமிழக அரசு விலைக் குறைப்பு செய்யுமா எனக் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய அரசாக உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...