கோவையில் ரேசன் அரிசி வியாபாரி கொடூரமாக வெட்டி கொலை - தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை…!

கோவை நாச்சிபாளையம் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை, கொடூரமாக வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை நாச்சிபாளையம் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை, கொடூரமாக வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமநாதன் (39). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், ராமநாதன் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக - கேரளா எல்லையான வேலந்தாவளம் பாபாஜி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக, ராமநாதன் நாச்சிப்பாளையம் பகுதியில் தனியாக ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை கேரளாவிற்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று இரவு வெளியே சென்ற ராமநாதன் இன்று காலை 8 மணியளவில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.



இந்நிலையில், காலை 10 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராமநாதன் வீட்டை கடந்து சென்ற போது, தலையில் வெட்டுக்காயங்களுடன் அவர் இறந்த கிடப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து, அவர் தகவல் அளித்ததன் பேரில், மதுக்கரை

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.பத்திரிநாராயணன், பேரூர் சரக டி.எஸ்.பி திருமால் உள்ளிட்டோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ராமநாதனை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி உத்தரவின் பேரில் மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...