சேரன்மாநகர் பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 25 தெரு விளக்குகள் பழுது நீக்கம்!

கோவை மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 தெரு விளக்குகள் பழுது சரிசெய்யப்பட்டன.


கோவை: சேரன்மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் பராமரிப்பு மற்றும் பழுது சரி செய்தல் குழுவினர் நேற்று (21.05.2022) வரவழைக்கப்பட்டனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின் விளக்குகள் குறித்த புகார்களை மொபைல் போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் செய்தியாகவோ அனுப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகே அமைந்துள்ள தெருவிளக்கு பழுது குறித்து புகார் தெரிவித்தனர். தவிர சேரன்மாநகர் ஏழாவது பஸ் ஸ்டாப் அருகே அமைந்துள்ள சிறுவர் பூங்கா வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள டவர் விளக்கு பழுது ஏற்பட்டது குறித்து பராமரிப்பு குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து அந்தப் பகுதிகளில் பழுது நீக்கும் பணி நடைபெற்றது.

இது குறித்து கோவை மாநகராட்சி 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கூறுகையில், "கடந்த சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது 25 தெரு விளக்குகள் பழுது சரி செய்யப்பட்டது. வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் இதுபோன்ற பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்றார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...