பொள்ளாச்சியில் கள்ளச்சாவி போட்டு தலைமை ஆசிரியை காரைத் திருடிய டிரைவர் உள்ளிட்ட இருவர் கைது!

பொள்ளாச்சியில் கள்ளச்சாவி போட்டு தலைமை ஆசிரியை காரை திருடிய டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே வஞ்சியபுரம் பிரிவு அம்மன் நகரைச் சேர்ந்தவர் 48 வயதான உமாதேவி.

இவர், கோவையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி சென்னை செல்வதற்காக தனது காரில் மகள் சோபியா உடன் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். கார் ஆக்டிங் டிரைவர் ராகவசந்த் என்பவர் ஓட்டி சென்றார்.

உமாதேவியை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு பின்னர், அவரது மகள் சோபியாவை வீட்டுக்கு காரில் அழைத்துச் சென்ற ராகவசந்த் காரை நிறுத்தி விட்டு சாவியை சோபியாவிடம் கொடுத்துச் சென்றுள்ளார். 20ம் தேதி காலை வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோபியா, அவரது தாய் உமாதேவிக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, 21ம் தேதி உமாதேவி இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த கிழக்கு போலீசார் நேற்று சூளேஸ்வரன்பட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ராகவசந்த் பிடிபட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாலமநல்லூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்காக உமாதேவியின் காரை திருடி விற்பனை செய்ய திட்டமிட்டு, காருக்கு கள்ளச்சாவி போட்டு திருடியதும், பிறகு காரை பாலமுருகனிடம் கொடுத்து, விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, ராகவசந்த் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், திருடு போன வாகனத்தையும் மீட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...