பொள்ளாச்சியில் குதிரை வளர்ப்பு விழிப்புணர்வு: திமுக இளைஞரணி சார்பில் நடந்த குதிரை பந்தயம்!

குதிரை வளர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி அருகே திமுக இளைஞரணி சார்பில் குதிரை பந்தயம் நடைபெற்றது.


கோவை: திமுக ஆட்சியின் ஒரு ஆண்டுகால சாதனையை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையிலும், குதிரை வளர்ப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் - ரங்கம்புதூர் மேடு பகுதியில் குதிரை பந்தயம் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கலந்துகொண்டு கொடியசைத்து குதிரை பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. சிறிய குதிரை, பெரிய குதிரை, நடு குதிரை மற்றும் ஏறு சவாரி, வண்டி சவாரி என ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதற்கு 400 மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.



இந்த தூரத்தை கடக்க ஏறு சவாரியில் உரிமையாளர்கள் குதிரை மீது ஏறியதும் வெற்றி இலக்கை நோக்கி குதிரைகள் சீறிப் பாய்ந்தது. அதேபோல் பூட்டிய வண்டியில் குதிரைகள் சீறிப் பாய்ந்ததை ஏராளமான பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இறுதியாக வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...