பொள்ளாச்சியில் தனது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஓவியங்கள் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதியை திருநங்கைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்று திருநங்கை கல்கி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வரைந்த ஓவிய விற்பனை கண்காட்சி பொள்ளாச்சி நல்லப்பா வீதியில் உள்ள ஒரு கடையில் நடைபெற்றது.

பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சியில், புரட்சியாளர் சேகுவேரா, பழங்குடியின பெண், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஓவியங்களை அங்கு வந்த பார்வையாளர்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.
நவீன முறையில் தீட்டப்பட்ட ஓவியங்களின் மூலம் விற்பனையாகும் தொகையின் ஒரு பங்கு திருநங்கைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும், தமிழக அரசு தற்போது திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்தாலும், கலை மற்றும் கல்வி திறமைகளை ஊக்குவிக்க சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சிக் கூடங்கள் அமைத்து தர வேண்டும் என்றும், திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் இரண்டு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.