திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொச்சிபாளையம் பிரிவிலிருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில் சுப்பிரமணி என்பவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றது தொடர்பாக ஏற்கனவே அருண்குமார், பிரவீன் மற்றும் ராமர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இவர்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பொது அமைதிக்கு, பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டதை அடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடம் வழங்கப்பட்டுள்ளது.