காதலன் அடித்ததால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

பொள்ளாச்சி அருகிலுள்ள மீனாட்சிபுரம் என்ற பகுதியில் காதலன் அடித்ததால் மனமுடைந்த காதலி கடந்த 12ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி.

இவரது மகள் தமிழரசி (19). இவரும் அதே பகுதியை சேர்ந்த கவின்குமார் (21) என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி அன்று கவின்குமார் தமிழரசியை தொலைபேசியில் அழைத்துள்ளார். அவர் தொலைபேசி எடுக்காததால், வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் தமிழரசியை தாக்கியதாக தெரிகிறது.

இதில் வருத்தமடைந்த தமிழரசி வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர், அவரது உறவினர்கள் அவரை மீட்டு அம்பராம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 16ம் தேதி வரை அங்கு சிகிச்சை பெற்ற அவரின் உடல்நிலை மோசமானதால், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தமிழரசியின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கவின்குமார் மற்றும் அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...