கோவை பெரியார் படிப்பகத்தில் மாட்டுக்கறியுடன் தடல் புடல் விருந்து..!

ஆம்பூரில் பிரியாணி திருவிழா மறுக்கப்பட்டது குறித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் விதமாகவும், கோவை பெரியார் படிப்பகத்தில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் பெரியார் படிப்பகத்தில் மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது.

சில தினங்களுக்கு ஆம்பூரில் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாக மாறிய நிலையில், இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்க அனுமதி அளிக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவை அம்மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் விதமாகவும், கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட பெரியாரிய அமைப்புகள் சார்பில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.



இந்த மாட்டுக்கறி பிரியாணி விருந்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அவர்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி கிரேவி மற்றும் கைமா வடை ஆகியவை வழங்கப்பட்டன.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...