பஞ்சு விலை உயர்வு: சிறு நூற்பாலைகள்‌ உற்பத்தி நிறுத்தம்‌: தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தலைவர் தகவல்..!

பஞ்சு கொள்முதல்‌ செய்வதற்கு நடப்பு மூலதனத்தில்‌ பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சை கொள்முதல்‌ செய்ய முடியவில்லை என தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜெ.செல்வன் கூறியுள்ளார்.


கோவை: தமிழ்‌ நாட்டில்‌ கடந்த ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறு நூற்பாலைகள்‌ சந்தித்து வருகிறது.

இதுகுறித்து தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜெ.செல்வன் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி 2022-ல்‌ 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின்‌ விலை ரூ. 75,000/- ஆக இருந்தது. தற்போது படிப்படியாக உயர்ந்து, இன்றைக்கு (21.05.2022) பஞ்சின்‌ விலை சராசரியாக ரூ. 1,15,000 ஆக உள்ளது.

அதேபோல்‌ ஜனவரி 2022-ல்‌ ஒரு கிலோ நூலின்‌ விலை ரூ. 328/- ஆக இருந்தது. இன்றைக்கு

(21.05.2022) ஒரு கிலோ நூலின்‌ விலை ரூ. 399/- ஆக உள்ளது. இதனை கணக்கிடும்‌ போது, சிறு நூற்பாலைகளுக்கு ஒரு கிலோவிற்கு ரூ. 50/- முதல்‌ ரூ. 60/- வரை நஷ்டம்‌ ஏற்படுகிறது.

மேற்கண்ட விவரம்‌ கீழே உள்ள அட்டவணையில்‌ விவரிக்கப்பட்டுள்ளது.

Month and year - Cotton Price per candy (356 Kgs) - Yam Price per kg

January 2022- Rs. 75,000/-- Rs. 328/-

May 2022- Rs. 1,15,000/-- Rs. 399/-

Increase in %- 53%- 21%

அபரிமிதமான பஞ்சு விலை உயர்வுக்கு, இவ்வாண்டு மிகவும்‌ குறைந்த பருத்தி உற்பத்தியே காரணம்‌. நமது நாட்டின்‌ பருத்தி உற்பத்தியின்‌ விளைச்சலை துள்ளியமான அளவிடுவதற்கு, அரசாங்கத்திடமோ, தனியாரிடமோ எவ்வித சரியான புள்ளி விவரங்கள்‌ இல்லை. பருத்தி சீசன்‌ ஆரம்பித்தவுடன்‌, பெரிய பஞ்சு வியாபாரிகளும்‌, பன்னாட்டு நிறுவனங்களும்‌ (Multi National Compznies-MNC) அதிக அளவில்‌ பஞ்சை கொள்முதல்‌ செய்து இருப்பு வைத்துக்‌ கொண்டார்கள்‌.

மேலும்‌, வெளிநாட்டிற்கும்‌ பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சு விலை கடுமையாக

உயர்ந்து விட்டதால்‌, எங்களது உறுப்பினர்களிடம்‌ பஞ்சு கொள்முதல்‌ செய்வதற்கு நடப்பு மூலதனத்தில்‌ பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சை கொள்முதல்‌ செய்ய முடியவில்லை. பல சிறு நூற்பாலைகள்‌ தங்களது நடப்பு மூலதனம்‌ முற்றிலும்‌ கரைந்து உள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையில்‌, நேற்று (20.05.2022) அன்று எங்களது சங்கத்தின்‌ அனைத்து உறுப்பினர்களின்‌ அவசர ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவுகள்:-

* பஞ்சு மற்றும்‌ நூல்‌ விற்பனை விலையில்‌ சீராகும்‌ வரை ஆலைகளை இயக்குவதில்லை என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

* இனி பஞ்சு கொள்முதல்‌ செய்வதில்லை.

இவ்வாறு தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜெ.செல்வன் கூறியுள்ளார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...