கோவை பூண்டி மலைக்கு செல்லும் சாலையில் கம்பீரமாக நடந்து வந்த காட்டு யானை…!

கோவை காந்திபுரத்தில் இருந்து பூண்டி மலைக்குச் சென்ற அரசு பேருந்து ஒன்று, பூண்டி அருகே சென்ற போது சாலையில் பேருந்தை நோக்கி எதிரே பெரிய தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது.


கோவை: கோடை காலத்தில் தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் வழக்கமாக கோவை பூண்டி மலைப்பகுதிக்கு செல்லும் சாலைகளை கடந்து செல்லும். இதனால், கோடை காலம் துவங்கியவுடன் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதித்தது.

இருப்பினும், உள்ளூர் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவை காந்திபுரத்தில் இருந்து பூண்டி மலைக்குச் சென்ற அரசு பேருந்து ஒன்று, பூண்டி அருகே சென்ற போது சாலையில் பேருந்தை நோக்கி எதிரே பெரிய தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது.

இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் வாகனத்தை பின்னால் எடுத்துள்ளார். அந்த காட்டு யானை கம்பீரமாக நடந்துச் செல்லும் காட்சியை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் படம் பிடித்துள்ளார். இதனால், பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...