கோவை பொள்ளாச்சியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்..!

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் 28-அணிகள் பங்கேற்கின்றன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது.

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று முதல் பொள்ளாச்சி யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் 9 ஆண்டு, மற்றும் ராஜ்குமார் M.S.மணி ஆகியோரின் 2ஆம் ஆண்டு நினைவு கோப்பை யாகவும், மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.



நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டிகளில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கிய முதல் போட்டியில் சக்தி கிரிக்கெட் அகாடமி அணியும்,பி.வை.சி.சி. அணியும் மோதின.

டாஸ் வென்ற சக்தி கிரிக்கெட் அகாடமி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 201 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நாச்சி குமார் 88 ரன்களும், ஸ்ரீ நிரஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர்.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பி.வை.சி.சி. அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குணா 26 ரன்களை எடுத்தார். இதையடுத்து 141 ரன்கள் வித்தியாசத்தில் சக்தி கிரிகெட் அகடமி அணி வெற்றி பெற்றது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...