கோவையில் பேரறிவாளனுக்கு உற்சாக வரவேற்பு...! பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர், கு. இராமகிருட்டிணன் உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் பேரறிவாளனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பேரறிவாளன், அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



Coimbatore: கோவை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு பின் விடுதலையாகியுள்ள பேரறிவாளன் இன்று கோவைக்கு வந்துள்ளார். அவருக்கு, பெரியார் அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்திற்கு பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம்மாளும் வருகை புரிந்தனர். அவர்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர், கு. இராமகிருட்டிணன் உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது,பேரறிவாளன், அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர், படிப்பகத்தில் அவருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி அவரது விடுதலை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேக் வெட்டி பேரறிவாளனுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், "பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதை விட மாநில உரிமைகளை மீட்டுள்ளோம் என்று தான் கூற வேண்டும். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளோம்.

இதனை அமைதி போராட்டம் என்று தான் கூற வேண்டும். பேரறிவாளன் சட்டத்தின் மூலம் விடுதலை ஆகியுள்ளார் எனவும் நாம் அனைவரும் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம்", என தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று 31 ஆண்டுகளுக்கு பின் விடுதலை பெற்ற பேரறிவாளன் மற்றும் அவருக்காக 31 ஆண்டு காலம் உழைத்த அவரது தாயாரும் கோவைக்கு வந்துள்ளனர்.பேரறிவாளனுக்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம், அதே போல் இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் போராடுவோம், என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய பேரறிவாளன், எனது விடுதலைக்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...