தமிழகம் முழுவதும் 1,000 குறு, சிறு ஸ்பின்னிங் மில்கள் தற்காலிகமாக மூடப்படும்: 'SISPA' அவசரக் கூட்டத்தில் முடிவு!

பருத்தி விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், சிறு, குறு ஸ்பின்னிங் மில்கள் செயல்பட முடியாத நிலையில் மில்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும் என்று சிறு குறு ஸ்பின்னிங் மில் அதிபர்கள் சங்க அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: பருத்தி விலை வரலாறு காணாத விலை உயர்வு சந்தித்து வருகிறது. 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை இன்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள குறு, சிறு பிரிவை சேர்ந்த ஸ்பின்னிங் மில்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே பஞ்சு வாங்குவதை நிறுத்துவது என்றும், இருக்கும் பஞ்சு தீர்ந்தவுடன் மில்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடுவது என்று கோவையில் இன்று மாலை நடைபெற்ற சிறு குறு ஸ்பின்னிங் மில் அதிபர்கள் சங்க அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 'SISPA' கௌரவ செயலாளர், ஜெகதீசன் கூறியதாவது: பஞ்சு விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசு இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கி உள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் புக்கிங் செய்யப்பட்ட பஞ்சு, இந்தியா வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். இன்று 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு குறு, சிறு ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே எங்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று மாலை கோவையில் நடந்தது. தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து குறு, சிறு ஸ்பின்னிங் மில்களும் பஞ்சு வாங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 1,000 ஸ்பின்னிங் மில்கள் குறு, சிறு பிரிவைச் சேர்ந்தவை. எனவே அவை அனைத்தும் தற்காலிகமாக மூட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...