பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு கோவை வந்த 3 பள்ளி சிறுமிகள் ஒப்படைப்பு!

வீட்டில் கோபித்துக்கொண்டு கோவை வந்த 3 சிறுமிகள் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை, சுமார் 14 வயது மதிக்கத்தக்க 3 சிறுமிகள் நீண்ட நேரமாக தனியாக அமர்ந்திருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அங்கு ரோந்து சென்ற போலீசார் சிறுமிகளை அழைத்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து 3 பேரிடம் தொடர்ந்து விசாரித்த போது, பெற்றோருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூன்று சிறுமிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், குழந்தை நல அமைப்பிற்கு தகவல் அளித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்த போது மூவரும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை

சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஒரே பகுதியை சேர்ந்த இவர்களை பெற்றோர்கள் கண்டித்து வந்ததால், வீட்டை விட்டு வெளியேறி, நேற்று மதியம் அங்கிருந்து பேருந்து மூலம் கோவை வந்ததும் தெரியவந்தது. அதே போல சிறுமிகள் காணவில்லை என பெற்றோரும் பட்டுக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். இதனிடையே அங்கு வந்த குழுந்தை நல பாதுகாப்பு அதிகாரிகள் மூவரையும் மீட்டு உக்கடம் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்தனர். இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் இன்று காலை கோவை வந்தனர். பின்னர் குழந்தை நல கமிட்டி முன்னிலையில் மூன்று சிறுமிகளும், பெற்றோர்களும் ஆஜர்படுத்தப்பட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...